Wednesday, 10 August 2011

தொழில்நுட்பம்

கணினித் தொகுதி (The computer system) by M.Naleem
கணினியென்பது தனியொரு உபகரணமல்ல.மாறாக பல பாகங்களையும் துணை கருவிகளையும் இணைத்து இயங்கும் ஒரு தொகுதியாகும். சில கணினிகள் பார்வைக்கு தனியொரு கருவியாகத் தென்பட்டாலும் பல்வேறு வேலைகளைச் செய்வதற்கு அதனுள்ளேயும் வெளியேயும் பல பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அவை சிறப்பான தேவைகளின் பொருட்டு இணைக்கப்பட்டு மிகவும் வியக்கத்தக்கவகையில்...

கணினியின் செயற்பாடுகளுடன் பின்னிப்பிணைந்துள்ளன. அடிப்படையில் கணினி ஒன்றின் செயற்பாடுகளை ஒருங்கமைக்கும் உறுப்புக்களை நாம்விளங்கிக்கொள்வதற்கு அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
வன்பொருள்
கணினி வன்பொருட்களை பின்வருமாறு வகைப்படுத்திக் கூறலாம்.

• மத்திய செயலி Central Processing Unit (CPU)

இது கணினியின் பிரதான செயற்பாட்டுப் பகுதியாகும். கணினி செயற்படும்போது அதன் இயக்கத்தை நிர்வகிப்பதும் கட்டுப்படுத்துவதும் இதன் பிரதான செயற்பாடாகும். கணினியின் மூளை என்று இதனைக் கூறலாம்.

No comments:

Post a Comment